முக்கியத்தலைவரின் பதவி பறிப்பு! காங்கிரசில் நடந்த அதிரடி மாற்றம்! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் முன்னாள், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு ஒரு கடிதம் எழுதினர்.

இந்தக் கடிதத்தால் காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சை வெடித்தது. குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பலரும், பாஜகவின் கை கூலிகளாக மாறி விட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை கிளப்பி, பின்பு அமைதியானது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே சி வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த குலாம்நபி ஆசாத், அம்பிகா சோனி, மல்லிகார்ஜுனா, மோதிலால் வோரா உள்ளிட்டோர் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ராகுல் காந்தி, பிரியங்கா, மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், சிதம்பரம் உள்ளிட்டோரும் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக தொடர்வார்கள்" என்று கே சி வேணுகோபால் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress new posting for old leaders


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->