60 தொகுதி.. திமுகவை திணற வைக்கும் கூட்டணி கட்சி.. கலக்கத்தில் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதிலிருந்தே ஒவ்வொரு கட்சியும் தயாராகிவருகிறது. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் பெரும் சிக்கலாக இருக்கும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் ஆலோசனைகள், நிர்வாகிகள் கூட்டம் என காங்கிரஸ் தற்போது இருந்தே தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகிறது. தாங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ள 80 தொகுதிகள் கொண்ட பட்டியல் காங்கிரஸ் தற்போது தயாரித்துள்ளது. இந்த பட்டியலில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் இன்று ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 63 தொகுதிகளை ஓடுகிறது. அதேபோல அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் 60 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள 60 தொகுதிகளை கேட்டு பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதனால், திமுக தலைமை கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress new plan for 2021 election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->