நைட் கிளப் விருந்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி..வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் ராகுல் காந்தி நிற்பதும் அவரை சுற்றி உள்ளவர்கள் மது அருந்துவது போன்ற காட்சிகள் அடங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், ராகுல்காந்தி நைட் கிளப் ஒன்றில் கலந்து கொண்டு இருக்கிற வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.

நேபாளத்திற்கு நேற்று சென்ற ராகுல் காந்தி தனது நண்பர் ஒருவரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ள மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் முக்வி, "முழுநேர சுற்றுலா பயணி, பகுதி நேர அரசியல்வாதி. பாசாங்குத்தனம் நிறைந்தவர். பயணம் முடிந்து நேரம் கிடைக்கும்போது, போலி கட்டுக்கதைகளையும் குற்றச்சாட்டுகளை உருவாக்கி நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress MP Rahul Gandhi participate in night club party


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->