எதிர்க்கட்சி தலைவர் உட்பட கூண்டோடு பாஜகவில் இணைந்த சட்டமன்ற உறுப்பினர்கள்!!  - Seithipunal
Seithipunal


கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானதை தொடர்ந்து ஆளும்கட்சியின் பலம் கோவா குறைந்திருந்த நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து கடிதம் அளித்திருந்தனர்.

இதுதொடர்பாக, கோவா சட்டசபையில் கடந்த மார்ச்  20 ஆம் தேதி பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டவந்த நம்பிக்கை இல்லா கொண்டுவந்தன. இதையடுத்து  நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது. கோவா சட்டசபையில் ஆட்சி அமைக்க மொத்தம் 19 உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலையில், பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு 20 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் பாஜக எதிராக வாக்களித்திருந்தனர். 

இந்நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த சந்திரகாந்த் கவ்லேகர் உள்பட, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று  மாலை சட்டசபை சபாநாயகர் ராஜேஷ் பட்னேக்கரை சந்தித்தினர். காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகுவதாக சபாநாயகரிடம் அவர்கள் கடிதம் அளித்தனர்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சிலிருந்து விலகிய பத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாஜகவில் இணைந்து விட்டதாக முதலமைச்சர் மந்திரி பிரமோத் சாவந்த்  தெரிவித்துள்ளார். 

சட்டசபையில் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு கட்சியை சேர்ந்த மொத்த எம்.எல்.ஏ.க்கள் பலத்தில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு அக்கட்சியில் இருந்து விலகினால் கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையயடுத்து காங்கிரஸ் கட்சிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்கு எந்த பிரச்னையும் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress mla's join in bjp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->