அமைச்சர்கள் யாரும் வேலை செய்ய தயாராக இல்லை.. திடீரென ராஜினாமா செய்த எம்எல்ஏ.! கலக்கத்தில் முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்ற உறுப்பினர்களில் கமல்நாத் அரசுக்கு 120 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளனர். 

அதில் 114 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பகுஜன் சமாஜ் , சமாஜ்வாடி மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. சில நாட்களாக கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடும் என பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று காங்கிரசை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் பாஜக தன் பக்கம் இழுத்து மறைத்து வைத்து உள்ளதாகவும் கூறி வருகின்றனர். இருப்பினும் டெல்லி அருகே உள்ள ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த 6 எம்எல்ஏக்கள் மீட்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் மாயமான நான்கு  எம்எல்ஏக்களில் ஒருவரான ஹர்தீப் சிங் டாங் தனது ராஜினாமா கடிதத்தை மத்திய பிரதேசம் சபாநாயகருக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது முறையாக மக்களின் உத்தரவு கிடைத்த போதிலும் கட்சியால் நான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறேன். 

ஊழல் நிறைந்த அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருப்பதால் அமைச்சர்கள் யாரும் வேலை செய்ய தயாராக இல்லை என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்ற மூன்று எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விட வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress mla resignation the post


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->