காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-களுக்கு அமைச்சர் பதவி., அதிரடிக்காட்டிய பாஜக!! - Seithipunal
Seithipunal


கோவா சட்டமன்றத்தில் பாஜகவின் பலம் 17 ஆக இருந்த நிலையில் அந்த கட்சி கூட்டணி கட்சிகளை நம்பி ஆட்சியை நடத்தி வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் மொத்தம் உள்ள 15 சட்டமன்ற உறுப்பினர்களில் பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து உள்ளனர் இதன்மூலம் 17 ஆக இருந்த பாஜகவின் பலம் 27 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிதாக பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்களில் சிலருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பாஜக கட்சி தலைவர் அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்களுடன் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை பிரித்து தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்ட பாஜகவின் செயல் ஜனநாயக படுகொலை என காங்கிரஸ் கட்சி மிக கடுமையாக விமர்சித்துள்ளது. ஆனால் சட்டமன்ற 10 பேர் விருப்பப்பட்டு எவ்வித நிபந்தனையுமின்றி தங்கள் கட்சியில் இணைந்து உள்ளதாக பாஜக விளக்கம் அளித்துள்ளது.

சட்டசபையில் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு கட்சியை சேர்ந்த மொத்த எம்.எல்.ஏ.க்கள் பலத்தில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு அக்கட்சியில் இருந்து விலகினால் கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையயடுத்து காங்கிரஸ் கட்சிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்கு எந்த பிரச்னையும் இல்லை என கோவா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress mla join in bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->