தமிழக முதல்வர் மெரினாவில் உண்ணாவிரதமா?! பீதியை கிளப்பும் பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், "நீட் தேர்வு பிரச்சனைகளுக்கு காரணமே திமுக, காங்கிரஸ் தான். மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி செய்தபோது கொண்டு வந்ததுதான் இந்த நீட்தேர்வு.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் சென்று போராடி நீட் தேர்வை ரத்து செய்தபோது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரின் மனைவி தான் நீட் தேர்வுக்கு ஆதரவாக வழக்காடி மீண்டும் நீட் தேர்வை கொண்டுவந்தார்" என்று காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டி பேசியிருந்தார். முதல்வரின் இதே குற்றச்சாட்டை அதிமுக எம்எல்ஏ இன்பத்துரை-யும் பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபாநாயகர் முன்பு கூச்சலிட்டனர். இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கே ஆர் ராமசாமி தெரிவித்ததாவது, "சட்டப்பேரவையில் நீட் தேர்வு வந்தது சரியா., தவறா., என்பதை பற்றி விவாதம் செய்யாமல், நீட் தேர்வு வருவதற்குக் காரணமே காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சிதான் என்று அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தெரிவித்தார். இதனையே தமிழக முதல்வரும் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏன் நீட் விவகாரத்தில், மத்திய அரசை எதிர்க்கத் தயங்குகிறார். நாங்கள் கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க தயார். எங்களுடன் இணைந்து உண்ணாவிரதம் இருக்க தமிழக முதல்வர் பழனிசாமி தயாரா?" என்று தமிழக முதல்வருக்கு சவால் விடுத்தது கே ஆர் ராமசாமி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress mla challenge to tn cm


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->