என் கவுன்சிலர் மனைவியை காணோம்- பூட்டிய வீட்டில் மைக்செட்டில் கதறும் காங்கிரஸ் பிரமுகர்.!  - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் நடைபெற்று முடிந்த ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக வெற்றி பெற்ற தன்னுடைய மனைவியை காணவில்லை என்று என மைக்செட்டில் புலம்பி வருகின்றார். 

சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் காரைக்குடி அருகே காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் மனைவி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கின்றார். இதனை தொடர்ந்து அவர் என்னுடைய மனைவியை யாரோ கடத்திவிட்டார்கள் என்று வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மைக் செட் வைத்து கூச்சலிட்டுக் கொண்டு இருக்கின்றார். 
 
மறைமுக தேர்தலுக்காக பதவிகளை கைப்பற்ற ஆங்காங்கே பல முன்னணி கட்சியினர் மாற்றுக் கட்சி கவுன்சிலர்களை கடத்தி செல்லும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது காங்கிரஸ் பிரமுகரின் கவுன்சிலர் மனைவியை யாரோ கடத்தி விட்டனர் என்று கூப்பாடு போட்டு கொண்டு இருக்கின்றார். 

ஆனால், விசாரணையில் அவரது மனைவி உறவினர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கின்றார் என்பது தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress member wife kidnapped


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->