கடைசி நேரத்தில்,வெளியான காங்கிரஸ் அறிவிப்பு! ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட அதிர்ச்சி!  - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பிரதமரை சந்தித்து இருப்பது பரபரப்பை உண்டாக்கியது. டெல்லியில் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மோடியின் வீட்டுக்கு வருகை தந்து ஒரே நேரத்தில் சந்தித்தனர். 

பிரதமர் மோடியை சந்தித்து விட்டு, அமித் ஷா மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா இருவரும் வெளியேறினார்கள். சிறிது நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் அனுப்பி உள்ளார். அவர்களிடத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும், இதுவரை தனக்கு ஒத்துழைப்பு அளித்து அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார். 

அவர் விரைவில் பாஜகவில்இணைவார்  என எதிர்பார்க்கப்படுகிறது அவருக்கு மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் பதவி அல்லது மத்திய அரசில் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஜோதிர்ஆதித்யா சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 17 பேர் பா.ஜ.கவில் இணைந்தாலோ அல்லது தங்களது பதவியை ராஜினாமா செய்தாலோ காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துவிடும்.

இந்த நிலையில் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே சி வேணுகோபால். காங்கிரஸ் மேலும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

"நீ என்ன போறது... நாங்களே உன்னை அனுப்புகிறோம் போ வெளியே" என அனுப்பியுள்ளது காங்கிரஸ் தலைமை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress expulsion scindia with immediately for anti party activities


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->