ஒரே நாளில் அந்தர் பல்டி அடித்த தலைவரும், செயல் தலைவரும்! பின்னணியில் திமுக?! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதிகளில் நாங்குநேரி காங்கிரஸ் கட்சி வசமிருந்த தொகுதியாகும். அதனால் அந்த கட்சி அங்கு போட்டியிடவே விரும்புகிறது. ஆனால் திமுக விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என தெரிகிறது. 

இதனையடுத்து தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்பதனை அறிந்துகொள்ள, நாங்குநேரியில் செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பேசினார். மேலும் 50 ஆண்டுகளாக தமிழகத்தில் எதிர்க்கட்சியாக மட்டுமே இருப்பது ஏன்? நம்மால் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? எனவும் கேள்வி எழுப்பினார் அழகிரி. 

தொடர்ந்து பேசிய அழகிரி, மற்ற கட்சிகளை போல காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடு இல்லாத இயக்கமாக இருக்கிறது, கட்டுப்பாடு இல்லாத இயக்கம் வெற்றி பெறாது எனவும், குறைந்தபட்சம் தெருவில் நடக்கும் தேர்தலிலாவது நாம் வெற்றி பெற முடியுமா? எனவும் எழுப்பினார் அழகிரி

தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடியும் என கே.எஸ்.அழகிரி பேசினார். இதன்மூலம் திமுக சீட் ஒதுக்கவில்லை என்றால் நாங்குநேரியில் காங்கிரஸ் தனித்து  களம் காணும் முடிவில் இருப்பதாகவே தெரிகிறது என செய்திகள் வெளியாகின. மேலும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். இது சர்ச்சையை உண்டு பண்ணியது. 

இந்த நிலையில் கூட்டணி கட்சியான திமுக அதிருப்தி தெரிவிக்கவே, நாங்கள் யாரும் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றவில்லை என பல்டி அடித்துள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தன்னிச்சையாக அந்த தீர்மானத்தை நிறைவேற்றியதாக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. நேற்று தனித்து போட்டியிடுவது குறித்து தலைவர் அழகிரி பேசிய நிலையில், நாங்கள் தனித்து போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றவில்லை என செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress explain we don't took resolution about nanguneri constituency


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->