காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்.. சோகத்தில் அரசியல் கட்சியினர்.! - Seithipunal
Seithipunal


சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பெனி பிரசாந்த் வர்மா (வயது 79).  இவர் உடல் நலக் குறைவு காரணமாக லக்னோவில் உள்ள அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 

இந்நிலையில் பெனி பிரசாந்த் வர்மா நேற்று மாலை காலமானார். முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சியை தொடங்கும்போது அவருடன் இருந்தவர்களில் ஒருவர் பெனி பிரசாந்த் வர்மா. பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 

1996 -௧௯ 98 தேவகோட்டை தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தார். 1998,1999 மற்றும் 2004 ஆகிய தேர்தல்களில் கைசெர்கஞ்ச் தொகுதியிலிருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 2009இல் கோண்டா தொகுதியிலிருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 

2011 ஆம்  ஆண்டு மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress ex minister passed away


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->