காங்கிரசின் தேர்தல் வியூகம்.! ப.சிதம்பரத்தின் கருத்து கேட்கும் அதிரடி.!! விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கலாம்.!!  - Seithipunal
Seithipunal


இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தலானது நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான அறிக்கையை அனைத்து கட்சிகளும் தயாரிக்க தொடங்கியிருக்கும் நிலையில்., தற்போது காங்கிரசும் அறிக்கையை தயார் செய்ய திட்டமிட்டுள்ளது. 

தேர்தல் அறிக்கையை தயார் செய்வதக்காக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழுவானது அமைக்கப்பட்டு., அந்த உயர்மட்ட குழுவில் ப.சிதம்பரம்., ஏ.கே.அந்தோணி., அகமது படேல்., ஜெயராம் ரமேஷ் மற்றும் குலாம்நபி ஆசாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

தேர்தல் அறிக்கையில் எந்தெந்த அம்சங்கள் இடம்பெற செய்வது என்பது குறித்த ஆலோசனையானது காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது., இந்த ஆலோசனையை ப.சிதம்பரம் காங்கிரஸ் மாநில தலைவர்களிடம் கேட்டு வருகிறார். 

நாட்டின் பொதுமக்களை கவரும் வகையிலான பல புதிய வகை கருத்துக்களை கொண்ட அறிக்கையை ப.சிதம்பரம் விரும்புவதால்., அதற்காக பல்வேறு தரப்பினரிடையே கருத்து கேட்டு தெரிந்தும்., அதனை தெரிவிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார். 

பொதுமக்கள் அவர்களின் கருத்துக்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள அலைபேசி எண் 72 920 88 245 மூலமாக வாட்ஸப்பிலும் கருத்துக்களை பகிரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress election plan on going p.chithambaram


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal