41 க்கு 27., ஒரு ராஜ்ய சபா சீட்.! திமுக-காங்கிரஸ் புது கணக்கு.! - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணியில், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகளையும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளையும், விசிக-வுக்கு 6 தொகுதிகளையும் ஒதுக்கி ஒப்பந்தம் ஆகியுள்ளது.

மேலும், காங்கிரஸ், சிபிஐ, சிபிஐஎம், மதிமுக, தவாக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை அனைத்துமே இழுபறியில் உள்ளது. 

நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, "எங்களுக்கு 3- வது அணி மீது நம்பிக்கையில்லை, தேர்தல் கூட்டணி தொடர்பாக யாருடனும் நாங்கள் பேசவில்லை. திமுகவுடன் இதுவரை இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது . 

தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு திமுகவிடம் இருந்து இன்னும் அழைப்பு வரவில்லை." என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சற்றுமுன் சென்னையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. 

காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் 41 தொகுதிகளை கேட்டு வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்து, ஒரு ராஜ்ய சபா சீட் கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CONGRESS alliance final info


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->