பெரும் சர்ச்சையில் சிக்கிய முதலமைச்சர்.! போலீசில் புகார்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் துடைப்பம். அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் டுவிட்டரில் வெளிட்ட செய்தி ஒன்றால் பெரும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

டுவிட்டரில், அவர் வெளியிட்டிருக்கும் பதிவொன்று மதஉணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருக்கிறது என குற்றச்சாட்டு உருவாகியிருக்கிறது.  அதில், மத சின்னத்தினை ஒரு நபர் துடைப்பம் வைத்துக்கொண்டு துரத்துவது போன்று ஓவியம் இடம்பெற்றுள்ளது. இதனால் போலீசில், முதமைச்சர் கெஜ்ரிவாலுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை வேட்பாளர் ராகவ் சத்தா கடந்த சில நாட்களுக்கு முன் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், பா.ஜ.க. வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறது என்று பதிவிட்டு, ஒரு வீட்டின் வாசலில் பசு மற்றும் கன்று நிற்பது போன்ற புகைப்படத்தினையும் சேர்த்து பதிவிட்டார். முதலமைச்சர் கெஜ்ரிவால் இதனை லைக் செய்திருந்தார்.

டெல்லி சட்டசபையில், இது குறித்து எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க.வை சேர்ந்த விஜேந்தர் குப்தா பேசும் போது, இந்திய தேர்தல் ஆணையத்திடம் சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளோம். நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் பசுவை ஆம் ஆத்மி அரசியலாக்குகின்றது.    இதுபற்றி இந்திய தேர்தல் ஆணையத்திடம் எடுத்து கூறுவோம் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், மதஉணர்வுகளை காயப்படுத்தும் வகையில் முதலமைச்சர் கெஜ்ரிவால் டுவிட்டர் பதிவினை வெளியிட்டு சர்ச்சை எழுப்பியிருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

complaint filed Delhi CM Kejriwals


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->