இடஒதுக்கீடு எப்போது கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.! ,முதலமைச்சர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


இட ஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து சமூகங்களுக்கும் நியாயபடி என்ன கிடைக்க வேண்டுமோ அது நிச்சயமாக கிடைக்கும் என்று, கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் தங்களுக்கு நியாயமான இட ஒதுக்கீட்டை தரவேண்டும் என்று, குருப சமூகம், வால்மீகி சமூகம் உள்ளிட்ட பல்வேறு சமூகங்கள் (சமூகம் -சாதி) போராட்டங்களை முன்னெடுத்து உள்ளன.

இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளும் பாஜக அரசு, அனைத்து சமூகங்களுக்கும் சட்டத்துக்கு உட்பட்டு சமமான நீதி வழங்கப்படும் என்று தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்ததாவது, 

"தங்கள் சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு பல்வேறு சமூகங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. எந்த சம்பவமாக இருந்தாலும் அனைத்து சமூகங்களும் சமூகங்களுக்கும் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு கண்டிப்பாக நீதி வழங்கப்படும்.

இது எனது கடமை. நான் எனது கடமையை சரியாக செய்வேன். இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் செய்வதை நான் எந்த குறையும் கூறவில்லை. அவர்களுக்கு போராடுவதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு. எல்லா சமூகங்களுக்கும் நியாயப்படி என்ன கிடைக்க வேண்டுமோ., அது நிச்சயம் கிடைக்கும். அது எப்போது கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது" என்று கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Yediyurappa SAY ABOUT Reservation   


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->