தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவியா? முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில்.! - Seithipunal
Seithipunal


தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் பழனிசாமி பதிகிலாளித்துள்ளார்.

திருச்சியில் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் புதிய அணையின் கட்டுமானப் பணிகளை இன்று நேரில் பார்வையிட்டு 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே இருந்த 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், ரூ.387.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக கதவணை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் 2021ம் ஆண்டு ஜனவரிக்குள் முடிந்துவிடும். இதுவரையில் 35% பணிகள் முடிந்துள்ளன. அதே சமயம் வருகின்ற ஜூன் மாதம் டெல்டாவுக்கு நீர் திறக்கப்படுவதால் கதவணை கட்டும் பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.

சிஏஏ விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தேவையற்ற வீண் வதந்திகளைப் பரப்பி வருவதாக தெரிவித்த முதல்வர் காவிரி ஆற்றில் மணல் அள்ளப்படுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் கட்டுமான பணிகளுக்கு மணலுக்குப் பதிலாக எம் சாண்டைப் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்றார்.

மேலும், தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி தரப்படுமா.? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, மாநிலங்களவை எம்.பி. பதவி கேட்க கூட்டணிக் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்ற அவர். தேமுதிகவுக்கு எம்.பி. பதவி தருவது குறித்து கட்சி ஒன்று கூடி முடிவு செய்யும் என்று பதிலளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm palanisamy answer to dmdk rajya sabha mp post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->