#BREAKING || ராஜினாமா? புதுச்சேரி முதல்வர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியின் அரசியல் களம் மட்டும் சூடுபிடித்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று நான்காவதாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தேர்தல் நெருங்கிய நிலையில், கடந்த மாதம் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் மற்றும்  தீப்பாய்ந்தான் பதவியை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர்.

நேற்று, ஏனாம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ., மல்லாடி கிருஷ்ணாராவ் தனதுபதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், புதுச்சேரி காமராஜ் நகர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளார்.

சட்டமன்றத்தில் மொத்தம் 30 தொகுதிகளில் காங்கிரஸ்- திமுக கூட்டணி பலம் 19 ஆக இருந்தது. தற்போது 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் பலம் 14 ஆக குறைந்துள்ளது. சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 16 எம்எல்ஏக்கள் தேவையான நிலையில், காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆக குறைந்துள்ளது.

புதுச்சேரி அமைச்சரவை கலைக்க உள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, "காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆளும் காங்கிரஸ் கட்சி செயல்படும்." என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Narayanasamy PTRESS MEET


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->