ஒரே நேரத்தில் 5 ஆளுநரா..? விரக்தியின் உச்சத்திற்கே சென்ற முதல்வர் - திமிறிக்கொண்டு உடைத்த இரகசியம்..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் மேலும் 4 ஆளுநர்கள் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் நாராயணசாமி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாத தன்மை.

மாநிலத்தில் ஆளுநர் அதிகார வரம்பு மீறி செயல்படுவது. அதிகாரம் இருந்தும் திட்டங்களை செயல்படுத்த தடை என பல கஷ்டங்கள் உள்ளன. துணை நிலை ஆளுநர் அலுவலகம், அரசு ஒப்புதல் இல்லாமல் துணைநிலை ஆளுநர் செயலகம் என மாற்றி கடிதம் அனுப்புகிறார்.

https://img.seithipunal.com/large/large_kiran-pedi-narayanasamy-4989.jpeg

கிரண்பேடி ஆளுநரா? அல்லது 5 ஆளுநர்கள் அங்கு பணிபுரிகிறார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.உள்துறை அமைச்சக உத்தரவை மீறி தேவநீதிதாசை ஆளுநர் நியமித்துள்ளார்.

இவர் இரண்டாவது ஆளுநராக செயல்படு கிறார். மற்றொரு அதிகாரியான ஸ்ரீதர் அரசு அதிகாரிகளுக்கு தேர்வு வைக்கிறார்.

இவர் மூன்றாவது துணைநிலை ஆளுநர். நான்காவது துணைநிலை ஆளுநராக காவல்துறை அதிகாரி உள்ளார். ஐந்தாவதாக கேர்டேக்கர் ஒருவர் உள்ளார்.

அவர் ஐந்தாவது துணைநிலை ஆளுநராக செயல்படுகிறார். அதிகார துஷ்பிரயோகம் மிகப்பெரும் அளவில் நடக்கிறது என்று தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Narayanasamy allegation five governors are working in Pondicherry


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->