#சற்றுமுன்: முடிந்தது சோலி! ஓபிஎஸ்., இபிஎஸ்., கடும் வாக்குவாதம்! சசிகலா குறித்து ஓபிஎஸ் விட்ட வார்த்தை!  - Seithipunal
Seithipunal


இன்று காலை தொடங்கிய அதிமுக செயற்குழு கூட்டமானது மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.முன்னதாகவே அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கிய ஒரு சில மணி நேரத்திலேயே 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக தேர்தலை ஒட்டி கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் கூட்டணி தொடர்பான விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது. இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் கூட இந்த செயற்க்குழுக் கூட்டத்திலேயே முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்ய வேண்டும் என்று சில அமைச்சர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், தம்பிதுரை உள்ளிட்டோர் இந்த செயற் குழுக் கூட்டத்திலேயே 2021 சட்டமன்ற தேர்தலை முன்வைத்து முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்களாம்.

அதே நேரத்தில் ஓ.பி .எஸ் தரப்பினர் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைத்து விட்டு அதன் பின்னர் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்யலாம் என்ற யோசனையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த 18ம் தேதி நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் கூட பதினொரு பேர் கொண்ட வழிகாட்டு ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று ஓ.பி .எஸ் தரப்பினர் வலியுறுத்தினார்கள்.

இ.பி.எஸ், ஓ.பி .எஸ் அணிகள் இணைப்புக்கு  முன்னதாக பல்வேறு நிபந்தனைகளுடன் தான் அணிகள் இணைப்புக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. அனால் அணியின் இணைப்பின் போது முன்வைக்கப்பட்ட 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டும் என்ற நிபந்தனை இதுநாள் வரைக்கும் நிறைவேற்றப்படவில்லை எனவே பதினோரு பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து பின்பு முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும் என ஓபிஎஸ் தரப்பினரும் பிடிவாதமாக கூறி வருவதாக  கூறப்படுகிறது.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அந்த பதினொரு பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை இதனால் அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் நீடித்து பரபரப்பு நிலவி வருகிறது. காலை 10 மணி முதல் 3 மணி வரை சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற விவாதங்களுக்கு பின்னர், இந்த அறிவிப்பை கேபி முனுசாமி வெளியிட்டுள்ளார். இந்த செயற்குழுவில் காரசார விவாதங்கள் நடைபெற்றது.

கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர், வரும் 7 ஆம் தேதியன்று முதல்வர் வேட்பாளர் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் பதவி கிடைத்தது குறித்து செயற்குழுவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே நேரடியாக வாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மக்கள் உங்களை முதலமைச்சராக விலை சசிகலாதான் முதலமைச்சர் ஆக்கியதாக இபிஎஸ் இடம் ஓபிஎஸ் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2021 வரை மட்டுமே முதலமைச்சராக இபிஎஸ் இருப்பதாக, ஒன்றாக இணைந்து செயல்படுவதாக ஓபிஎஸ் கூறியதாகவும், 2021-க்கு பிறகு இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று ஓபிஎஸ் தெரிவித்ததாகவும் தகவல்  வெளியாகியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி செய்வதாக பிரதமர் பாராட்டி உள்ளார் என ஓபிஎஸ்க்கு  இபிஎஸ் பதில் அளித்ததாகவும், முதல்வர் பதவி கிடைத்தது குறித்து செயற்குழுவில் நேரடியாக வாதம் நடைபெற்று உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM CANDITATE ISSUE AT OPS EPS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->