ஆரம்பம்! 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலைச்சர்...! வரும் 15ம் தேதி முதல்...
Chief Minister will launch Stalin with you project from 15th
கடலூரில் சிதம்பரத்தில் வரும் 15ம் தேதி ''உங்களுடன் ஸ்டாலின்'' திட்டத்தை 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்' தொடங்கி வைக்கிறார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது," 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், வருகிற ஜூலை 15 முதல் நவம்பர் வரை அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

மேலும், முதல்வர் தொடங்கி வைக்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 10,000 சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளன.அதுமட்டுமின்றி,மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களுக்கு வரும் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படும்.உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் பெறும் விண்ணப்பம் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 3,768 முகாம்கள் ஊரகப்பகுதிகளில் 6,232 முகாம்கள் நடத்தப்படவுள்ளன.இந்த முகாம் பணிக்காக சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தமிழ்நாட்டின் கடைகோடி மக்களுக்கும் அரசின் சேவை, திட்டங்களை அவர்களது பகுதிக்கே சென்று வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்படுகிறது "என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Chief Minister will launch Stalin with you project from 15th