உள்ளாட்சி தேர்தல் எப்போது.? முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம்  திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்குடி, அவனியாபுரம் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்து பேசியதாவது

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்தவில்லை என பேசி வருகிறார். அம்மா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணி தொடங்கிய நிலையில் தி.மு.க.வினர் உயர்நீதிமன்றத்திலே சில காரணங்களை கூறி வழக்குத் தொடுத்தார்கள்.

அதனடிப்படையிலே தான் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவினை நிறைவேற்றும் வகையில் 3 மாத காலத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் 

இவ்வாறு முதல்வர் பேசினார் 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister edappadi palanisamy announcement local body election


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal