வசமாக சிக்கினார் சிதம்பரம்! பிடியை இறுக்கும் சிபிஐ! காங்கிரசுக்கு பேரதிர்ச்சி!   - Seithipunal
Seithipunal


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வந்த நிலையில், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால், மேலும் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறுவதால், அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக  கூறப்பட்டது. மேலும் மூன்று மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் அவரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். 

இதனையடுத்து அவர் சிபிஐ நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அதனால் நீதிமன்ற வளாகம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சிதம்பரத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி சிபிஐ சார்பில் துஷார் மேத்தாவும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்கள். 

சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியதும் சி.பி.ஐ. சார்பில் வாதிடும் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, சிதம்பரத்தை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு மனு அளித்தார். 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட சிபிஐ  மனுவில், சிதம்பரத்திற்கு ஜாமீனில் வராத பிரிவில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

துஷார் மேத்தா தொடர்ந்து வாதிடுகையில் சிதம்பரம் தொடர்ந்து அமைதி காக்கிறார் எனவும், கேள்விகளை புறக்கணிக்கிறார் எனவும் கூறியுள்ளார். மேலும் இது பண மோசடி தொடர்பான வழக்கு என்று கூறிய அவர், நாங்கள் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் நிலையில் இருக்கிறோம், ஆனால் அவர் ஒத்துழைக்கவில்லை என கூறியுள்ளார். ஜாமினில் வெளிவராத பிடிவாரண்ட் என்பதால் காங்கிரஸ் தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chidambaram is stuck! CBI to hold on! congress shock


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->