வெளியான அதிர்ச்சி வீடியோ, அம்பலமான உண்மை : முதல்வர் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்ல வேண்டும்., போர்க்கொடி தூக்கும் மக்கள் நீதி மய்யம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக முதலவர் முக ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னை, வியாசர்பாடி புது நகர் பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் அப்துல் ரஹீம் (31 வயது) மீது போலீசார் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த அன்று நள்ளிரவு அப்துல் ரஹீம் தனது பணி முடிந்து வீடு திரும்பிய போது, அவரை தடுத்து நிறுத்திய போலீசார், எங்களை பார்த்த பிறகுதான் நீ முக கவசத்தை அணிந்து இருக்கிறாய், அதனால் அபராதம் கண்டிப்பாக கட்டியாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் போலீசாருக்கும் அப்துல்ரஹீம்.,க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அப்துல் ரஹீமை போலீசார் கைது செய்து, இரவு முழுவதும் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

மறுநாள் காலை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்டக் கல்லூரியை சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் மாணவனை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீடியோ வெளியானதால், சட்டக்கல்லூரி மாணவனை தாக்கியது சம்மந்தமாக பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 9 பேர் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாகத் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் காவலரால் தாக்கப்படும் வீடியோ அதிர்ச்சியளிக்கிறது. 

மாற்றுத்திறனாளி மரணம், மாணவர் மீதான தாக்குதல் என்று காவல்துறை மீது எழும் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு அத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் தகுந்த விளக்கமளிக்க வேண்டும்." என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai kodunkaiyur police attack for no face mask in kodunkaiyur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->