இயற்கையை அழிக்கும் தமிழக அரசு.! சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் .! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பழைய மகாபலிபுரம் சாலை மேம்பாட்டிற்காக ஏரியை மண்ணால் நிரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. நீர்நிலைகளை தமிழக அரசே ஆக்கிரமிக்க கூடாது என்றும், சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பழுரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அவரின் அந்த மனுவில், "பழைய மகாபலிபுரம் சாலை விரிவுபடுத்துவதற்காக, கல்லேரி எனும் ஏரியை தமிழக அரசு மணல் மூடி நிரப்பி வருகிறது.

ஏரியை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசே, ஏரியை மணல் மூடி ஆக்கிரமிப்பது செய்து வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

இன்று இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றத்தில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நீர்நிலைகளை மணிலா அரசு ஆக்கிரமிப்பதை தடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'வளர்ச்சித் திட்டங்களுக்காக நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கூடாது. மணல் அள்ளி மூடுவதற்கு பதிலாக அந்த ஏரியின் மேல், மேல்மட்ட பாலம் அமைக்கலாம். இயற்கையை அழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது." என்று அறிவுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hc say tn govt do not nature destry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->