திமுக தொடர்ந்த இட ஒதுக்கீடு வழக்கில்., சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, தமிழக அரசியல் கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு ஒன்றை அமைத்தது. இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு, தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கை தொடர்புபடுத்தி, தமிழகத்தில் இந்த 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என்று, மத்திய அரசு கூறியதாக திமுக ஒரு வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நெதிமன்றத்தில், திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குக்கும், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 2020 -2020 ஆம் ஆண்டு கல்வியாண்டில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்த பின்னரும், அதை அமல்படுத்தவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு செயல்" என்று தெரிவித்தார்.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அவர்கள் அளித்த மனுவில் 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டுவிட்டு, தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரி உள்ளனர். இந்த இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. இதில் எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை" என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழகத்தில் பின்பற்றக்கூடிய 69 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு 2021 -22 ஆம் கல்வியாண்டில் எப்படி அமல் படுத்த போகிறீர்கள்? இந்த விவகாரத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து, வரும் வாரம் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கை ஜூலை மாதம் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC order to central govt for tn reservation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->