ஓடிய ஓட்டம் என்ன? ஆடிய ஆட்டம் என்ன? பட்டியலின பிரசிடெண்ட்க்கு ஆப்பு வைத்த சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கும், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த இரண்டு கட்ட தேர்தல்களிலும் 75 சதவீதத்துக்கு மேல் மக்கள் வாக்களித்து உள்ளனர்.

இதில் பல வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும், பல இடங்களில் தேர்தல் நடைபெறாமல், ஒரு வாக்கு கூட பதிவாக வாக்குச் சாவடிகளும் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியின்றி தேர்வான பெண்ணின் பதவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பட்டியல் இனத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கூட நாயக்கனேரி கிராமத்தில் இல்லாத நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். மேலும், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, போட்டியின்றி தேர்வான பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் மாதம் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hc order for nayakkaneri president case issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->