கூடாரத்தை காலி செய்த அமமுக... நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததால் டிடிவி தினகரன் ஷாக்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள ஆவடி தொகுதியின் வேட்பாளராக அமைச்சர் பாண்டியராஜன் போட்டியிடுகிறார். அமைச்சர் பாண்டியராஜன் ஆவடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். 

இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசுகையில், " அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது. இதனால் தமிழக அமைதிப்பூங்காவாக இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் நல்லாட்சி வழங்கி, சிறப்பான பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். 

மக்கள் மற்றும் மகளிர் நலன் காக்கும் அரசாக அதிமுக தலைமையிலான தமிழக அரசு இருந்து வருகிறது. அதிமுக அரசு கடந்த 4 வருடமாக பல சாதனைகள் செய்துள்ளது. இரட்டை இலை சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும் " என்று பேசினார். 

இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சிக்கு பின்னர் அமமுக கட்சியை சார்ந்த நிர்வாகிகள் ஆர்.சிவபெருமான், வி.சங்கர், ஜி.பழனி, ஜி.குணசேகரன், பா.நல்லதம்பி ஆகியோரின் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொன்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Avadi AMMK Members Join AIADMK 3 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->