பாலியல் வன்கொடுமை வழக்கு! அனைத்து முதல்வர்களுக்கும் வர இருக்கும் அவசர உத்தரவு!  - Seithipunal
Seithipunal


மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகளை போலீஸ் விசாரணை 2 மாதங்களில் முடிக்கவேண்டும் என அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் துரதிருஷ்டவசமானது மற்றும் கண்டனத்திற்குரியது. தற்போது நிலுவையில் இருக்கும் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகளை விரைவாக விசாரிக்க நினது முழுவதும் விரைவு நீதிமன்றங்களை ஏற்படுத்த, நாட்டில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் வலியுறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் இத்தகைய வழக்குகளின் காவல்துறை விசாரணையை 2 மாதங்களில் முடிக்க, மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் குறிப்பிட்ட ரவிசங்கர் பிரசாத், நீதிமன்றத்துக்கு வரும் இத்தகைய வழக்குகள், 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central minister ravishankar prasad press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->