மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!  - Seithipunal
Seithipunal


மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்க்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் தற்போது டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான்க்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் எந்தவிதமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், ராம்விலாஸ் பஸ்வான் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து கட்சி பணிகளை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிரக் பஸ்வான் கவனித்து வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central minister ram vilas paswan admitted in icu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->