சற்றுமுன் மத்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


விளை நிலங்களுக்கு ஊட்டச் சத்து அளிக்கும் மகத்தான பணியை உரங்கள் மேற்கொள்வதன் காரணமாக தமிழ்நாட்டில் சம்பா சாகுபடி நடைபெற்று வரும் டெல்டா மாவட்டங்களில் உரங்களின் தேவை கணிசமாக அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில், பயிர்கள் பசுமை பெறுவதற்கும் வளர்ச்சி அடைவதற்கும் நைட்ரஜன் தேவை என்பதால் , யூரியாவின் தேவை மிகவும் அதிகரித்து தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் . 

இதனை உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களும், மத்திய உரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அந்தக் கடிதத்தில், வெகு விரையில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு, டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கான உரத் தேவை அதிகரித்துள்ளதால், தமிழ்நாட்டிற்கு கூடுதல் உரம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், தமிழகத்துக்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt order for urea


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->