அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு.! காரணம் என்ன., முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, வரும் ஜூலை 18ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷி, இந்த அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வரும் 18ம் தேதி காலை 11 மணி அளவில் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நேரடியாக ஓராண்டுக்கு பிறகு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல், வாரம்தோறும் காணொளி காட்சி மூலம் நடைபெற்று வந்த மத்திய அமைச்சரவை கூட்டம், இன்று நேரடியாகவே பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக விவாதம் நடைபெறுவதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, வரும் 18 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷி அறிவித்துள்ளார். இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி, தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளன.

மேலும், வரும் 18ம் தேதி அன்று மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை தலைவர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt announce all party meeting july


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->