நாடாளுமன்றத்தில் இன்று அரங்கேறபோகும் முக்கிய நிகழ்வு., பரபரப்பில் இந்திய அரசியல்!! - Seithipunal
Seithipunal


நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 303 தொகுதிகளுக்கு அதிகமான தொகுதிகளை கைப்பற்றிய பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார். 

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு  முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.  பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மோடி தலைமையிலான மத்திய அரசின் அடுத்த 5 ஆண்டுக்கான செயல் திட்டம் என்ன என்பது இந்த பட்ஜெட் மூலம் தான் தெரியவரும், 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அனைத்து தரப்பினராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் தொழில்களை ஊக்குவிக்கும் வகையிலும், அரசுக்கு வரிசெலுத்துவோரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திடமான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. 

பொருளாதார தேக்க நிலை மற்றும் அரசுக்கு வரி வருவாய் குறைவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில சீர்திருத்தங்கள் செய்து முன்பை விட மிகவும் உத்வேகத்தில் எடுத்துச் செல்வதற்கு ஏற்ப இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என தெறிகிறது

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government budjet filing today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->