ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மீது மூன்று பிரிவுகளில் அதிரடியாக பாய்ந்த வழக்கு.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் சமீபத்தில் திருத்தும் கொண்டு வந்தது, அதன்படி கடந்த 2014 ஆம் ஆனது டிசம்பர் 31 ஆம் தேதிக்கு  முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையராக வாழ்ந்த கிருத்துவர்கள், இந்துக்களை கொடுமை படுத்தியதால் அவர்கள் இந்தியாவுக்கு குடியேறினர். இதையடுத்து கிருத்துவர்கள், இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்  இஸ்லாமியர் இந்திய குடியுரிமை வழங்க முடியாது என்ற வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. 

இதை எதிர்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் சென்னையில் நேற்று பேரணி நடைபெற்றது.

இந்தநிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற பேரணி தொடர்பாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுள்ளது. வைகோ, திருமாவளவன், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் கி.வீரமணி, ஜவஹருல்லா, உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி பேரணி நடத்தியதாக எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக கூடுவது, போக்குவரத்துக்கு இடையூறு என மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case filed to mk stalin for cab against rally


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->