எம்பி பதவியை இழக்கப்போகும் ரவீந்திரநாத் குமார்.? பேரதிர்ச்சியில் ஓ பன்னீர்செல்வம்.!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதியிலும், அதிமுக 09 தொகுதியிலும் வெற்றி பெற்றது.

தேனி தொகுதி எம்பி ரவீந்திரநாத் குமாரை எப்படியாவது மத்திய அமைச்சர்  ஆக்கவேண்டும் என ஓபிஎஸ் பல முயற்சிகள் செய்தார். ஆனால் ரவீந்திரநாத் குமரன் அமைச்சராக முடியவில்லை. 

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாரின் எம்பி பதவிக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது தேனி தொகுதி சார்ந்த மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் தேனி மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றபோது வாக்குகளை பெற மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 

இதனை அதிமுகவினர் திட்டமிட்டு செய்து உள்ளனர். தேனி தொகுதியில் பணம் பட்டுவாடா செய்ததற்காக ஆதாரங்கள் உள்ளது. ரவீந்திரநாத் குமாரின்வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case filed in high court in ravindranath kumar


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->