பங்களாவில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. திமுக பிரமுகர் மீது மோசடி வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


கோவை வடவள்ளி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் திமுக பிரமுகர் ஆனந்தன், இவருக்கு சொந்தமான பங்களாவை, ஷேக், ரஷீத் ஆகிய இருவர் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.  

ஷேக், ரஷீத் உள்ளிட்ட இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக கோவை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் பேரூர் டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையில் போலீசார் அங்கு சென்றபோது இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

இதையடுத்து  திமுக பிரமுகர் ஆனந்தனுக்கு சொந்தமான பங்களாவில் போலீசார் சோதனையிட்டதில் அங்குள்ள அறைகளில், செல்லாத பழைய 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 268 கட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடித்து அவை அனைத்தும் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 

தப்பியோடிய ஷேக், ரஷீத் ஆகிய இருவரும் எந்த ஊரைச்சேர்ந்தவர்கள், செல்லாத நோட்டுகளை எதற்காக பதுக்கி வைத்தனர், இரட்டிப்பு பண மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களா? ஷேக், ரஷீத்துக்கு வீடு கொடுத்த வீட்டின் உரிமையாளரும்  திமுக பிரமுகருமான அனந்தனுக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், அந்த பங்களாவிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்லாத பழைய 500, மற்றும் 1000 ரூபாய் தாள்கள் அடங்கிய 268 கட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பழைய ரூபாய் தாள்களை கமிஷன் அடிப்படையில் மாற்றித் தருவதாக வாங்கி மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

அதாவது ஒரு லட்ச ரூபாய் பழைய தாள்களைக் கொடுத்தால் அதற்கு பதிலாக 50 ஆயிரம் ரூபாய்க்கு புதிய தாள்கள் வழங்கப்படும் என்ற அடிப்படையில் இந்த மோசடி நடந்து இருப்பதக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ஆனந்தன் மற்றும் அவரது வீட்டில் தங்கியிருந்த ஷேக், பெரோஸ், ரஷீத் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case filed for dmk members illegal money transfer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->