திமுக எம்எல்ஏ மீது அதிரடியாக பாய்ந்த வழக்கு.. அதிகளவில் ஷேர் செய்யும் திமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் தொகுதி எம்எல்ஏவும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோ தங்கராஜ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும் கொரோனா வைரஸையும் ஒப்பிட்டு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். 

அந்த பதிவில் கோ கொரோனா கோ, கோ பேக் மோடி, இரண்டுமே திரும்பிச் செல்வதில்லை, மக்களாகிய நாம்தான் போராடி விரட்ட வேண்டும். மக்களை அழிக்கும் வைரஸ் கொரோனா,  மோடி நாட்டை அழிக்கும் வைரஸ் என பதிவு செய்துள்ளார். 

இதற்கு பாஜக தரப்பில் இருந்து பல கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டது. பாஜக எச். ராஜா, மனோ தங்கராஜ்  மீதி வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரை திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

இந்நிலையில் மனோ தங்கராஜ் மீது கன்னியாகுமரி மாவட்ட பாஜக செயலாளர் விசு என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மனோ தங்கராஜ் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case filed against for dmk mla


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->