மீண்டும் டோக்கனா? தோல்வி பயத்தில் திமுக செய்த கொடூர சம்பவம்! ஸ்டாலின் சகோதரி செல்வி கொலை மிரட்டல்!   - Seithipunal
Seithipunal


மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ கட்சியினருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் சகோதரி செல்வி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய சென்னை தொகுதியின் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து, அவரது உறவினரான செல்வி, சனிக்கிழமை மாலை சூளைமேடு பகுதியில்,வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அமமுக கூட்டணி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் தெகலான் பாகவியை ஆதரித்து அக்கட்சியை சேர்ந்த ஹசீனா பேகம் மற்றும் ரிஷ்வானா பேகம் ஆகிய இரு பெண்கள் அதே பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தனர். 
 
அப்போது அவர்களிடையே மோதல் உருவானது. இரு தரப்பிலும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் விசாரித்த போது, எஸ்.டி.பி.ஐ கட்சியினர்  வாக்காளர்களின் பட்டியல் படி டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது. அதனை செல்வி உட்பட தி மு க வினர் தட்டிக் கேட்டதால் சண்டை வந்ததாக தெரிவிக்கபட்டுள்ளது. 

இந்த மோதல் தொடர்பாக அளிக்பட்ட புகாரின் அடிப்படையில் SDPI கட்சியை சேர்ந்த ஹசீனா பேகம் மற்றும் ரிஷ்வானா பேகம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

அதேபோல எஸ்டிபிஐ கட்சி சார்ந்த ஹசீனா பேகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்டாலின் சகோதரி செல்வி மற்றும் திமுக பிரமுகர் திருமலை ஆகியோர் மீது கொலை மிரட்டல், மோசமான  வார்த்தைகளால் பேசியது  உள்ளிட்ட 2 பிரிவுகளில் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த இரண்டு தரப்பும் தொடர்ந்து மோதிகொள்வது வாடிக்கையாகிவிட்டது. சில தினங்களுக்கு முன் பெட்ரோல் குண்டு வரை வன்முறை சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு கட்சியும் அடித்துக்கொள்ள மற்றொரு வேட்பாளர் பாமகவை சேர்ந்த அதிமுக கூட்டணி வேட்பாளர் சாம்பால் இந்த தொகுதியில் யாரையும் விமர்சிக்கமால் பிரச்சாரம் செய்து வருவது கவனிக்கத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file against stalin's sister selvi during election campaign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->