முக ஸ்டாலின், TTV தினகரன் மீதான வழக்கு.! நீதிபதி அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

 இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் முக ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக முதலமைச்சர் சார்பில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது.

இதை போல கடந்த ஏப்ரல் மாதம் கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார். இதை தொடர்ந்து அவர் மீது கரூர் மாவட்ட செசன்சு கோர்ட்டில் முதலமைச்சர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி தினகரனுக்கு கரூர் கோர்ட் சம்மன் அனுப்பியது.

இதை அடுத்து  இருவரும் தங்களுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் மதுரை கிளையில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு மதுரை கிளையில் இருந்து சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது இந்த வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது வழக்குகளை விசாரித்த நீதிபதி  மு க ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்கு விசாரணைகளுக்கு இடைக்கால தடை விதித்து  இருவரும் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும்  உத்தரவிட்டார் பின்னர் இவர்களது வழக்கில் 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case against Stalin, TTV Dinakaran. court order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->