நாளை வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு.. மகிழ்ச்சியில் தமிழக மக்கள்.!! - Seithipunal
Seithipunal


2020 - 2021 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த வெள்ளிக்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி நடைபெற்றது. அதையடுத்து கடந்த 4ஆம் தேதி இரண்டாவது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில், நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர், இக்கூட்டத்தில் சிறப்பு வேளான் மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cabinet meeting for feb 19th


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->