தமிழகத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல்! தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்?! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வான காங்கிரஸ் கட்சியை சேர்த்த எச்.வசந்தகுமார், தனது நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுத்தார் இதையடுத்து, எச்.வசந்தகுமாரின் கடித்தை சபாநாயகர் ஏற்று கொண்டார். இதன் பின்னர் நாங்குநேரி காலியான தொகுதியாக தமிழக அரசு அரசனை வெளியிட்டது. 

இந்த நிலையில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். மேலும் நாங்குநேரி தொகுதி காலியானது குறித்து தமிழக சட்டப்பேரவை செயலர் அளித்த கடிதத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

by election announcement by election commission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->