தமிழகத்தில் பஸ் ஸ்ட்ரைக் தொடரும்.! அதிரடி அறிவிப்பு., அதிர்ச்சியில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று நள்ளிரவு முதல் (இன்று வியாழக்கிழமை) காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக திமுக அதன் கூட்டணி கட்சிகளின் போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்து உள்ளன.

வேலைநிறுத்தத்தில் 95 சதவீத தொழிலாளர்கள் ஆதரவு தருவதால் தமிழகத்தில் பேருந்துகள் ஓடாது. பொதுமக்களின் சிரமத்துக்கு தொழிற்சங்க கூட்டமைப்பு வருத்தம் தெரிவித்து இந்த போராட்டடதை கையில் எடுத்துள்ளது.

தொழிலார்களின் வேலை நிறுத்தத்தை சமாளிப்பதற்காக தமிழக அரசு முன்னேற்பாடுகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் வழக்கம் போல இயங்கிக் கொண்டு தான் இருப்பதாக வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தீவிரப்படுத்தபடும் என்று சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும், தொழிற்சங்கங்களை அழைத்து அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும்,  சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bus Strike continue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->