லாரி ஓட்டுநர் தூங்கியதால் இன்று அதிகாலை நடந்த கோர விபத்து.! மூன்று பேர் பலி, 15 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


பழனி அருகே அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 14 பேர் 15 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையத்தில் இருந்து கோவைக்கு, அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்த அரசு பேருந்தை செல்ல பாண்டியன் என்பவர் ஓட்டிச்சென்றார்.

இந்த அரசு பேருந்து கோவை சாலையில், தாளையம் என்ற இடத்தில் சென்றபோது, கோவையிலிருந்து செங்கல் லோடு இறக்கி விட்டு நேர் எதிர் திசையில் திரும்பி வந்து கொண்டிருந்த லாரி, அரசுப்பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், படுகாயம் அடைந்த 15 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் :

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த திருக்குமரன் மகன் விக்கிரபாண்டி(வயது 24), பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்டன்(வயது 30), முருகன்(வயது 38) ஆகியோர் பலியாகினர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் விவரங்கள் :

அரசு பஸ் ஓட்டுநர் செல்லபாண்டி, பழனியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜேஷ், பயணிகள் தர்மர், முருகன், சுதாகர், ஸ்டீபன், ராஜசேகர், மணிவேல், கருப்புசாமி உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்துக்கான காரணம் :

போலீசாரின் விசாரணையில் லாரி ஓட்டுநர் ராஜேஷ் தூக்கத்தில் லாரியை ஓட்டி வந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BUS accident in dindukal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->