ஓபிஎஸ், டிடிவி தினகரன், சீமான், எல்.முருகன், குஷ்பூ போட்டியிட்ட தொகுதிகளின் வாக்கு சதவிகிதம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

தமிழகத்திலேயே அதிகபட்சமாக பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 % வாக்குப் பதிவாகியுள்ளது 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிகள் 85.6 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. 

திமுக தலைவர் மு க ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 60.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிகள் 73.65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிட்ட தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகள் 74.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

பாஜக வேட்பாளர் குஷ்பு போட்டியிட்ட ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதியில் 58.4 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதியில் 65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

டிடிவி தினகரன் போட்டியிட்ட கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 67.43 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BODI THARAPURAM election poll percentage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->