பாஜகவை வளர்க்க மீண்டும் மட்டமான மத அரசியல்.! எல்.முருகனுக்கு தடையா.?!  - Seithipunal
Seithipunal


வெற்றிவேல் என்ற யாத்திரையை நவம்பர் 6ஆம் தேதி முதல் ஆரம்பிக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் L.முருகன் அவர்கள் அறிவித்துள்ளார். முருகனின் அறுபடை வீடுகளுக்கும் செல்கின்ற இந்த யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

L.முருகனின் இந்த யாத்திரைக்கு ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் பாஜக மதத்தை வைத்து அரசியல் புரிவதாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கின்றார். 

இந்த நிலையில் எல்.முருகன் நடத்தும் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று இந்திய தேசிய லீக் கட்சி டிஜிபி அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்து இருக்கின்றது.

அந்த மனுவில், "L.முருகன் அவர்களின் வெற்றிவேல் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். மேலும், சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் L.முருகன் நவம்பர் ஆறாம் தேதி துவங்க உள்ள வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது." என்று இந்திய தேசிய லீக் கட்சி தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp will take region politics in tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->