பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது! H ராஜா சிவகங்கையில் போட்டி!  - Seithipunal
Seithipunal


தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் அமைந்த கூட்டணியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி சிவகங்கை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கோயமுத்தூர் என்று தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது 

அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணியில், அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் பாஜக மட்டும் அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தற்போது வெளியிட்டுள்ளார். 

அதன்படி தற்போது கன்னியாகுமரி தொகுதியில், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல எதிர்பார்க்கப்பட்டது போலவே தூத்துக்குடி தொகுதியில், திமுக சார்பில் களமிறங்கி இருக்கும் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் களமிறங்குகிறார். 

அதற்கடுத்தபடியாக ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜக சார்பாக போட்டியிடுகிறார். சிவகங்கை தொகுதியில் ஹெச் ராஜா போட்டியிடுகிறார். கோயம்புத்தூர் தொகுதியில் பாஜகவை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp tamilnadu candidate list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->