அடுத்தடுத்து அதிரடி., அதிமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்த பாஜக.! 3 தொகுதி கன்ஃபார்ம்.!  - Seithipunal
Seithipunal


இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்களை தமிழக கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

கடந்த சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி -தோல்வி கணிப்புகளை முன்னிறுத்தி வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண வாய்ப்புகளை அரசியல் கட்சிகள் கணித்து வருகின்றனர். 

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக மதுரை தெற்கு, கிழக்கு, வடக்கு தொகுதியில் தேர்தல் அலுவலகங்களையும், பிரச்சாரத்தையும் அதிரடியாக தொடக்கி அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக 7 தொகுதிகளை வெற்றி பெற்றது. 3 தொகுதியில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக மதுரையின் வடக்கு, கிழக்கு, தெற்கு தொகுதிகளை தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மதுரையின் வடக்கு, தெற்கு, கிழக்கு தொகுதிகளில் பாஜக தனது தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. இதில் உச்சபட்சமாக மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடப் போகும் வேட்பாளரையும் மறைமுகமாக இவர்தான் என்று பாஜக சொல்லாமல் சொல்லி உள்ளது.

மதுரை தெற்கு தொகுதியில் பாஜகவின் மாநில துணைத் துணைத் தலைவரான ஏ ஆர் மகாலட்சுமி, மதுரை தெற்கு தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் மதுரை தெற்கு தொகுதியில் பாஜகவின் தேர்தல்பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. தேர்தல் அலுவலகம் திறக்க வந்த பாஜகவின் மாநில தலைவர் எல் முருகன் உடன் பாஜக மணிலா துணை தலைவர் மகாலட்சுமி தெற்கு தொகுதியின் வேட்பாளர் என்பதுபோல் அவருடன் நின்று கொண்டிருந்தார்.

இதேபோல், மதுரை கிழக்கு தொகுதியில் 'மதுரை கிழக்கே., தாமரையின் இலக்கு' என்ற பெயரில் மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்தரன் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் தொடங்கப்படாத நிலையில் பாஜக மதுரை மாவட்டத்தில் 3 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP start election campaign in madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->