நீ நல்ல ஆம்பளையா இருந்தா இப்போ விடுறா., திருமாவளவனை ஒருமையில் விளாசிய ராதாரவி.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகம் வரக்கூடிய தமிழ் பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்தில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை தொடங்கி வைக்கிறார். அப்போது, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ஒரே மேடையில் உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, நாம்தமிழர் உள்ளிட்ட கட்சியின் தொண்டர்கள், தமிழகம் வரக்கூடிய பிரதமர் நரேந்திர மோடியை திமுக எவ்வாறு வரவேற்கலாம்.., கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக தலைவரும், திமுகவினரும், திமுகவின் கூட்டணி கட்சிகளும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் போதெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து., 'கோ பேக் மோடி' என்ற ஸ்டாக் மூலம் எதிர்ப்பு செய்து வந்த நிலையில், தற்போது ஆளுங்கட்சியான பிறகு தங்களுடைய கொள்கையை மறந்துவிட்டு சிவப்பு கம்பளம் விட்டு வரவேற்பு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது கருப்பு பலூன் கருப்புக்கொடி எல்லாம் காண்பித்த திமுக இப்போது சிவப்பு கம்பளம் விரிப்பது இரட்டைவேடம் என்றும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒன்றும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்றும் என இரட்டை வேடம் போடும் திமுக என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த நடிகர் ராதாரவி அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த காணொளியில், "கருப்பு பலூன் காட்டினீர்களே.., இப்போது காட்டுங்களேன்., திருமாவளவன் கருப்பு பலூன் கட்டுனானே., இப்ப காட்டுடா., நீ நல்ல ஆம்பளையா இருந்தா இப்ப காட்டுடா.," என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை ஒருமையில் பேசி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp radharavi say about thirumavalavan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->