திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிமுக கூட்டணி கட்சி.! கலக்கத்தில் ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


இன்று முதல் திமுகவை கண்டித்து சென்னையில் பாஜகவினர் ஏழு இடங்களில் போராட்டம் நடத்தப்போவதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் அறிவித்துள்ளார். 

நேற்று கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன், தமிழகத்தில் வன்முறைக்கு பெயர் போன கட்சி திமுக. உட்கட்சி மனப்பான்மையால் மூன்று இளைஞர்கள் தினகரன் அலுவலகத்தில் எரிக்கப்பட்டனர். 

ஏற்கனவே, கள்ளத்துப்பாக்கி பெயர்போன கட்சியை திமுக. தமிழகத்தில் பாஜக வளர்ச்சியை பார்த்து திமுக பயப்படுகிறது. இதனால்,மோடி பிறந்தநாள் விழாக்களில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆலந்தூரில் சுவர் விளம்பரம் செய்த பாஜகவினரை, திமுக வட்ட செயலாளர் நாகராஜ் மிரட்டியுள்ளார். மூன்று பெண்கள் காயப்போட்டு உள்ளனர். மேலும் அவர்களின் தங்க வளையல் காணவில்லை. 

ஆயிரம் விளக்கு பகுதியில் போஸ்டர்களை திமுகவினர் கிழித்திருக்கிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் இந்த அராஜகத்தை திமுக நிறுத்தவேண்டும். இதை கண்டித்து இன்று காலை 11 மணிக்கு பாஜக சார்பில் சென்னையில் 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தேர்தல் நெருங்கிய நிலையில் திமுகவின் அச்சுறுத்தல் எங்களுக்கு உத்வேகத்தை தருகிறது. திமுக என்றால் வன்முறை, கட்டப்பஞ்சாயத்து கட்சி என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp protest against dmk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->