போதையில் அதிமுக பிரமுகர் கூறிய வார்த்தை.! அடித்து நொறுக்கிய பாஜகவினர்.!  - Seithipunal
Seithipunal


குடியுரிமை சட்டத்துக்கு எதிராக குடிபோதையில் கோஷமிட்ட அதிமுக பிரமுகர் ஒருவரை பாஜகவினர் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. 

மத்திய அரசு நடைமுறைப்படுத்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு ஏற்படுத்தும் வண்ணம் பாஜக பல்வேறு இடங்களில் விளக்க பொதுக்கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றது. 

அதுபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் தேன்கனிக்கோட்டை பகுதியில் பாஜக சார்பில் விளக்க கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொது செயலாளரான் நரேந்திரன் மற்றும் மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த விளக்கக்கூட்டத்தில் அதிமுக பிரமுகர் ராஜா என்பவர் கலந்து கொண்டார். அவர் மது போதையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பல கோஷங்களை எழுப்பி இருக்கின்றார். இந்த செயலானது பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும், அவர் “மோடியா? லேடியா?” என்று ஏதேதோ ஆவேசமாக பேச, இதை கண்டு ஆத்திரமடைந்த பாஜகவினர் அவரை அடித்து நொறுக்கி இருக்கின்றனர். ஓடிவந்த போலீஸார் பாஜகவினரை தடுத்து ராஜாவை மீட்டு இருக்கின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp party members attack admk member


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->