234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடப் போகும் அதிமுக கூட்டணி கட்சி.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. தேசிய கட்சியான பாஜக இந்த முறை தமிழகத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்ற பல்வேறு தேர்தல் பணிகளை செய்து வருகிறது. 

இதனிடையே பாஜக கட்சியில் பிரபலமான நபர்களை இணைத்து வருகிறது. சமீபத்தி பாஜகவில் குஷ்பு, அண்ணாமலை உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ளனர். மேலும் மற்ற கட்சியில் உள்ள பிரபலமான நபர்களையும் பாஜக தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. இதன் மூலம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பிரபலமான வேட்பாளர்கள் களத்தில் நிறுத்தி வெற்றி பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இந்த தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்து பாஜக தீவிர ஆலோசனை ஈடுபட்டுவருகிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது பாஜக. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக மட்டும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று அனைத்திலும் தோல்வியை தழுவியது. 

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா என்று தெரியவில்லை. பாஜகவுடன் கை கோர்த்து மக்களை சந்திக்க அதிமுக தயாராக இல்லை என கூறப்படுகிறது. நேற்று சென்னையில் பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சிடி ரவி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், முன்னாள் தலைவர் இல கணேசன், எச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், விபி துரைசாமி, அண்ணாமலை, கே டி ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் 234 தொகுதியிலும் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp new plan for 2021 assembly election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->